ராகுலுக்கு எதிராக இங்கிலாந்தில் வழக்கு போட போகிறேன்: லலித் மோடி ஆவேசம்..!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (15:36 IST)
ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் வழக்கு போட போகிறேன் என லலித் மோடி ஆவேசமாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசியபோது மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்து உள்ளார். 
 
இந்த நிலையில் பொருளாதார குற்றம் செய்துவிட்டு இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற லலித் மோடி, ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்தில் வழக்கு தொடர போவதாக  தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் கடந்த 10 ஆண்டுகள் மேலாக வசித்து வரும் லலித் மோடி ராகுல் காந்திக்கு எதிராக ஆவேசமாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் நீதிக்கு பயந்து தப்பி ஓடி விட்டதாக ராகுல் காந்தியும் அவரது கூட்டாளிகள் சிலரும் மீண்டும் மீண்டும் சொல்வதை நான் பார்த்து வருகிறேன்
 
எனக்கு எதிராக எப்போது குற்றச்சாட்டு நிரூபணமாகி இருக்கிறது? ஊழல் மற்றும் நிதி மோசடிகளில் தன்னை தொடர்பு படுத்தி பேசியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறேன் என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments