Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

Siva
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (16:38 IST)
குவைத் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத் நாட்டுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்ற நிலையில், அங்கு அவருக்கு இந்தியர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குவைத் சிட்டியில் நடந்த 'ஹாலா மோடி' என்ற குவைத் வாழ் இந்தியர்களுடனான   சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். பின்னர், குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை என்பவரை சந்தித்து, இந்தியா மற்றும் குவைத் தரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.

இந்த நிலையில், குவைத் நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்' என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நட்பின் அடிப்படையில் நாட்டின் தலைவர்களுக்கும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, இந்த விருது முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பில் கிண்டன், ஜார்ஜ் புஷ், மற்றும் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments