Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரின் ஒரே ஒரு உத்தரவால் 2000 திருமணங்கள் ரத்தா?

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (07:39 IST)
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்த ஒரே ஒரு உத்தரவு காரணமாக அம்மாநிலத்தில் சுமார் 2000 திருமணங்கள் ரத்தாகும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

உபி மாநிலத்தில் உள்ள அகமதாபாத் உள்பட ஒருசில இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரண கும்பமேளாவும், ஹரித்துவார், அலகாபாத்தில் மட்டும் 6 ஆண்டுக்கு ஒருமுறை அரை கும்பமேளா விழாவும் நடைபெறும் வழக்கம் உண்டு.. அலகாபாத்தில் 2013 ஆம் ஆண்டு பூரண கும்பமேளா நடைபெற்ற நிலையில், 2019ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் முதல் மார்ச் மாதம் 4-ம் நாள் வரை, 50 நாள்கள் அரை கும்பமேளா விழா நடைபெறவுள்ளது.

இந்த கும்பமேளாவுக்கு நாடெங்கிலும் இருந்து வரும் பக்தர்களை தங்க வைக்க தனியார் இடங்கள் அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அலகாபாத் உள்ளிட்ட ஒருசில நகரங்களில் உள்ள தனியார் லாட்ஜ்கள், திருமண மண்டபங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. அலகாபாத்தில் மட்டும் இந்த 50 நாட்களில் சுமார் 2000 திருமணங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்