Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகுல் காந்திக்கு குமாரசாமி அறிவுரை சொல்லத் தேவை இல்லை: சித்தராமையா

ராகுல் காந்திக்கு குமாரசாமி அறிவுரை சொல்லத் தேவை இல்லை: சித்தராமையா
, புதன், 6 மே 2015 (09:49 IST)
ராகுல் காந்திக்கு குமாரசாமியின் அறிவுரை தேவை இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.


 

 
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் குந்தாபுரா அருகே வராகி அணையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறன.
 
இதன் முதற்கட்ட பணிகள் முடிவடைந்ததை அடுத்து அவற்றின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார்.
 
அந்த விழவில் சித்தராமையா பேசியதாவது:- 
 
மாநிலத்தில் எனது தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகே வராகி நீர்ப்பாசன திட்டத்தின் 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
 
மாநில அரசு கடந்த 3 ஆண்டுகளில் வராகி உள்பட பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களுக்காக ரூ.34 ஆயிரத்து 300 கோடி விடுவித்து உள்ளது.
 
நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்கு நன்றாக தெரியும். இவ்வாறு சித்தராமையா பேசினார். 
 
இந்த விழா முடிந்த பிறகு சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராகுல் காந்தி கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளின் குறைகளை கேட்க வேண்டும் என்று குமாரசாமி சொல்கிறார்.
 
ராகுல் காந்திக்கு இவருடைய அறிவுரை தேவை இல்லை. குமாரசாமி முதலமைச்சராக இருந்தபோது விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை.
 
விவசாயிகளின் நலனுக்காகவே காங்கிரஸ் கட்சி சிந்தித்து செயல்படுகிறது. ராகுல் காந்தி விரைவில் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்வார்"  என்று சித்தராமையா கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil