Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயைவிட்டு மாட்டிக்கொண்ட மோடி: படாதபாடுபட்ட மொமெண்ட்!!!

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (11:26 IST)
நிகழ்ச்சி ஒன்றி கலந்துகொண்டு பேசிய மோடி கன்ஃபியூஷனில் கொச்சிக்கு பதிலாக கராச்சி என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தேசிய கட்சிகள் ஆங்காங்கே பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களை சந்தித்து வருகின்றன.
 
இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டையை வைத்திருப்பவர்கள் இந்தியாவில் எங்கிருந்தாலும், எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
 
கொல்கத்தாவில் இருந்தாலும் சரி கராச்சியில் இருந்தாலும் சரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டையை வைத்திருப்பவர்கள் இலவச சிகிச்சை பெற முடியும் என்றார். இதைகேட்டதும், அந்த அரங்கமே அமைதியானது.
 
ஏனென்றால் மோடி கொல்கத்தாவில் இருந்தாலும் சரி கொச்சியில் இருந்தாலும் சரி என்று கூறுவதற்கு பதிலாக கொல்கத்தாவில் இருந்தாலும் சரி கராச்சியில் இருந்தாலும் சரி என கூறிவிட்டார்.
 
இதனை உணர்ந்த மோடி, உடனடியாக நான் கராச்சியை சொல்லவில்லை, கொச்சியை சொன்னேன் என்றார். என் சிந்தனை அனைத்தும், எதிரி நாடான பாகிஸ்தான் மீது உள்ளதால் தவறுதலாக பேசிவிட்டேன். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாபர் சாதிக் சகோதரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.. நீதிபதி முக்கிய உத்தரவு..!

யானை தாக்கி இருவர் பலி எதிரொலி: பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை..!

கூட்டணிக்கு வர்றவங்க எல்லாம் 50 கோடி, 100 கோடி கேட்குறாங்க: திண்டுக்கல் சீனிவாசன்

இன்றிரவு கனமழை பெய்யும் பகுதிகள்: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

‘அமரன்’ திரையிட்ட தியேட்டரில் குண்டு வீசிய 3 நபர்கள் கைது: தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments