Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நேரத்தில் கிரண்குமார் ரெட்டி தேர்தல் போட்டியிலிருந்து விலகல்

Webdunia
சனி, 19 ஏப்ரல் 2014 (15:48 IST)
ஆந்திர முன்னாள் முதல்வரும் ஜெய் சமைக்கிய ஆந்திரா கட்சித் தலைவருமான கிரண் குமார் ரெட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.
மே 7-ல் நடைபெறவுள்ள தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்நிலையில் இன்று சீமாந்திரா பகுதிக்கு உட்பட்ட சித்தூர் மாவட்டம் பிளேரு தொகுதியில் போட்டியிட கிரண்குமார் மனுத்தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், கிரண் குமார் எதிர்பார்த்தபடி மனுத்தாக்கல் செய்யவில்லை. கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக அவரது சகோதரர் கிஷோர் குமார் ரெட்டி மனுத்தாக்கல் செய்தார்.
 
கட்சிக்காக சீமாந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய இருப்பதாக கிரண்குமார் ரெட்டி தெரிவித்தார். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தனித் தெலங்கானா உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரண் குமார் ரெட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments