Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அநீதி செய்தவர்களை கொல்லுங்கள்' - ராஜ் தாக்கரேவின் பேச்சால் சர்ச்சை

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (17:39 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நவ நிர்மான்  கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, விவசாயிகள் மத்தியில் பேசுகையில். ' உங்களுக்கு அநீதி செய்தவர்களை கொல்லுங்கள் என பேசியது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மகாராஷ்டிர  மாநிலம் யாவாத்மால் பகுதியில் அவரது கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நவ நிர்மான்  கட்சி தலைவர் ராஜ் தாக்கரே விவசாயிகளிடம் பேசுகையில், நீங்கள் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். அது உங்களின் எந்த பிரச்சனையையும் தீர்க்க போவதில்லை. அப்படியே உங்களுக்கு தற்கொலை செய்யும் எண்ணமிருந்தால், முதலில் உங்களுக்கு அநீதி செய்தவர்களை கொல்லுங்கள் என்று பேசினார். 
 
மேலும், தேர்தல்கள் அனைத்தும் சாலைகள், வேலைவாய்ப்பு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நடைபெறுகின்றன. ஆனால், இன்று வரை இந்த அடிப்படை தேவைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. கிராமங்களில் கூட  மதுபானங்கள் கிடைக்கின்றன. ஆனால், குடிநீர் கிடைப்பதில்லை எனவும் பேசினார். 
 
ராஜ் தாக்கரேவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை டிடிகே சாலையில் உள்ள ’துளசி மெட்ராஸ் ஸ்டோரை’ திருமதி. செல்வி செல்வம் மற்றும் பல பிரபலங்கள் திறந்து வைத்தனர்!

கட்சியில இருக்கதுனா இருங்க.. இல்லைனா கெளம்புங்க! - சீமான் பேச்சால் அப்செட் ஆன நிர்வாகி எடுத்த முடிவு!

காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா-மாலத்தீவு ரூ.3,000 கோடியில் ஒப்பந்தம்: பிரதமர் மோடி, அதிபர் முய்சு கையெழுத்து..!

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்: மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

Show comments