Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் தலித் பெண் பலாத்காரம் செய்து கொலை: மூன்று பேர் கைது

Webdunia
புதன், 4 மே 2016 (16:42 IST)
கேரளா மாநிலம், பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாணவியின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் மாணவியின் உடலில் 30 இடங்களில் கூர்மையான அயுதங்களால் சிதைக்கப்பட்டது என காவல் துறையினர் தெரிவித்தனர்.
 

 

இந்நிலையில் ஏர்ணாகுள்த்தில் பொதுமக்கள், பெண்கள் அமைப்பினர் குற்றவாளியை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.இதைத்தொடர்ந்து மாணவியின் கொலை வழக்கில் தொடர்புள்ள 3 பேரை காவல்துறை கைது செய்தது.

மேலும், பலாத்காரம் செய்தது ஒரு நபராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், விசாரணைக்காக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கேரள மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், கேரள மாநில மனித உரிமை ஆணையக் குழு போன்ற அமைப்புகள், இந்த வழக்கில் முக்கியத்துவம் காட்டிவருவதுடன்,  காவல்துறையினரிடம் இருந்து விசாரணை அறிக்கைகளை பெற முயன்று வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்