Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள காங்கிரஸ் கட்சியிலும் பாலியல் வன்கொடுமை:' கருத்து சொன்ன பெண் தலைவர் டிஸ்மிஸ்..!

Siva
திங்கள், 2 செப்டம்பர் 2024 (12:52 IST)
கேரளா திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக ஹேமா கமிஷன் அறிக்கை தெரிவித்த நிலையில் தற்போது கேரளா காங்கிரஸ் கட்சியிலும் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக பெண் தலைவர் ஒருவர் கூறியுள்ள நிலையில் அவர் திடீரென கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கேரளா காங்கிரஸ் கட்சியில் படுக்கைக்கு அழைக்கும் கீழ்த்தரமான நடைமுறை இருந்து வருவதாகவும் கட்சியில் பெண் தலைவர் சிமி ரோசபில் ஜான் என்பவர் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த கருத்தை தெரிவித்த சில மணி நேரங்களில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்
 
கேரளா காங்கிரஸ் கட்சியில் பெண் உறுப்பினர்கள் உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்றால் கட்சியில் இருக்கும் சிலரது பாலியல் வன்முறைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும் நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் கேரளா காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் உள்பட சில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே பெண் நிர்வாகிகளுக்கு பதவி கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி பெண் உறுப்பினர்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி அவரை கேரள காங்கிரஸ் கமிட்டி பதவிகளில் இருந்து நீக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் லட்சக்கணக்கான பெண்களை மனரீதியாக இந்த செயல் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும்,  அவர்களுடைய கண்ணியத்தை குறைப்பதாக இருப்பதாகவும் அதனை அடுத்து சிமி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கேரளா காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும் இந்த  குற்றச்சாட்டை கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்