பாஜக இந்த பக்கம் வர கூடாது! – போர்டு போட்ட பொதுமக்கள்!

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (12:14 IST)
கேரளாவில் பாஜக – ஆர்.எஸ்.எஸ் வரக்கூடாது என பொதுமக்கள் வீட்டின் முன் போர்டு வைத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. முக்கியமாக கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சி மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகியோருமே இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கேரளாவில் பல்வேறு மாணவ அமைப்புகளும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாநில பாஜகவினர் குடியுரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக வீடு வீடாக சென்று விளக்கம் அளிக்க இருப்பதாக அறிவித்து இருந்தனர். கேரள பாஜகவும் இதுபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள் தங்கள் வீடுகளின் முகப்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதிய போர்டுகளை பொருத்தியுள்ளனர். மேலும் அதில் ”குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் அளிக்க ஆர்.எஸ்.எஸ் – பாஜக யாரும் உள்ளே வர வேண்டாம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments