Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள மக்கள் எக்காரணம் கொண்டும் மதவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள் - அச்சுதானந்தன்

வீரமணி பன்னீர்செல்வம்
ஞாயிறு, 18 மே 2014 (13:16 IST)
கேரள மக்கள் எந்த காரணம் கொண்டும் மதவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள். இதனால்தான் பாஜகவால் கேரளாவில் கால் ஊன்ற முடியவில்லை. அதேசமயம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆனால் கேரளாவில் மட்டும் பாஜகவின் வெற்றி பறிபோய்விட்டது. அங்குள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளை காங்கிரசும், 8 தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சியும் கைப்பற்றின.
 
பாஜகவால் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை. பாஜகவின் இந்த தோல்வி பற்றி கேரள முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அச்சுதானந்தன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
 
கேரள மக்கள் எந்த காரணம் கொண்டும் மதவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள். இதனால்தான் பாஜக கேரளாவில் கால் ஊன்ற முடியவில்லை. அதே சமயம் எங்கள் கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.
 
2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது நடந்துள்ள தேர்தலில் நாங்கள் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இரு மடங்கு வெற்றியை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளார்கள். ஆனாலும் இதைவிட அதிக தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அதற்காக தொடர்ந்து நாங்கள் பாடுபடுவோம்.
 
இவ்வாறு அச்சுதானந்தன் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யின் தவெகவில் இணைந்த 100க்கும் மேற்பட்ட மூதாட்டிகள்.. வரவேற்ற இளைஞர்கள்..!

சிரியாவில் அசத் ஆட்சி வீழ்ச்சி - ஆக்கிரமிப்பு கோலன் குன்று குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்

வீட்டில் ஜெராக்ஸ் மிஷின் வைத்து 100 ரூபாய் கள்ளநோட்டு அடித்த நபர்.. சுற்றி வளைத்து பிடிப்பு..!

Selfie Camera தேவையில்ல.. வேற லெவல் Optionஉடன் களமிறங்கிய Lava Blaze Duo 5G! - விலை இவ்வளவுதானா?

நாய் மீது மோதிய அரசு பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

Show comments