Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதிரியாரை கடத்திய பிரபல அரசியல் கட்சித் தலைவர்

பாதிரியாரை கடத்திய பிரபல அரசியல் கட்சித் தலைவர்

பாதிரியாரை கடத்திய பிரபல அரசியல் கட்சித் தலைவர்
, வியாழன், 2 ஜூன் 2016 (09:46 IST)
பாதிரியார் ஒருவரை தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கேரள மாநிலம், கொல்லம் கொட்டாரக்கரை பகுதியில் பிரபல சர்ச் உள்ளது. இதன்  பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜோசப் ஜார்ஜ்(56).
 
இந்த நிலையில், கடந்த மாதம், 27 ஆம் தேதி  தமிழகத்தில் உள்ள கூடலுார் சென்று, அங்கு தொரப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.
 
மே 28 ஆம் தேதி அன்று, பாதிரியார் ஜோசப் வெளியே வரும் போது, அவரை ஒரு கும்பல் கடத்தியது. மேலும்,  பாதிரியாரை விடுவிக்க, 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு அவரது சகோதரர் ஜேக்கப் ஜார்ஜை மிரட்டியுள்ளனர். 
 
இதனால் பயந்துபோன ஜேக்கப் கூடலுார்  போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார், கட்டத்தில் கும்பலிடம் போலி பேரம் பேசி, அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.
 
பின்பு, ரூ.10 லட்சத்தை கொடுக்க தயராக உள்ளதாகக் கூறி, கடத்தல் நபர்களை தேவர்சோலைக்கு வரவழைத்தனர். அங்கு அவர்களை சுற்றி வளைத்து, 7 பேர் கொண்ட கம்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 
மேலும், சென்னையைச் சேர்ந்த மக்கள் தேசம் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் ஆசைத்தம்பி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னது...போலீஸ் வண்டியை காணவில்லையா?