Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

Siva
வெள்ளி, 24 ஜனவரி 2025 (16:52 IST)
34 ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்து தப்பிய கொலை குற்றவாளி தற்போது மீண்டும் சிறைக்கு வந்து சரணடைந்திருப்பதாக கூறப்படும் சம்பவம் கேரளாவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலையில் இருந்து 1991ஆம் ஆண்டு கொலை குற்றவாளி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவர் மர்மமான முறையில் சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு காவல்துறையினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 34 ஆண்டுகள் கழித்து, தற்போது 65 வயதில் கொலை குற்றவாளி மீண்டும் சிறைக்கு திரும்பி சரணடைந்துள்ளார். "தனது இறுதி காலத்தை சிறையில் கழிக்க விரும்புகிறேன்" என அவர் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில், குற்றவாளியின் புகைப்படம் கூட சிறையில் இல்லாத நிலையில், பல ஆவணங்களை சரிபார்த்த பிறகே அவர் சிறையில் இருந்து தப்பியவர் என்பதை உறுதி செய்துள்ளனர். இதனால், அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், சரணடைய வந்தவரின் பெயர் பாஸ்கரன் என்றும், தனது அடையாள ஆவணங்களை கையுடன் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. "தனது மனைவி சமீபத்தில் இறந்ததால், குழந்தைகளும் வெளியூரில் இருப்பதால் தனியாக இருக்க பிடிக்கவில்லை; எனவே மீண்டும் சிறைக்கு வந்துவிட்டேன்" என அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநரின் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு.. அரசியல் கட்சிகள் ஆச்சரியம்..!

நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிப்பு: தவெக அறிவிப்பு..!

வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு.. நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!

அசைவம் சாப்பிட்டதுக்கு இந்தா இருக்கு ஆதாரம்.. பதவி விலகுங்க! - நவாஸ் கனிக்கு அண்ணாமலை பதில்!

புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பிவிட்டு நிர்வாகிகளிடம் விஜய் முக்கிய ஆலோசனை.. தவெகவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments