Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை பக்தர்கள் போல் நடிக்கிறார்கள்: இடதுசாரி அரசுக்கு கேரள ஆளுநர் கடும் கண்டனம்

Siva
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (13:58 IST)
சமீபத்தில் கேரள இடதுசாரி அரசு ஐயப்ப சம்மேளனம் என்ற மாநாட்டை நடத்தியதை குறித்துக் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர்  கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.  பாரத மாதாவை விமர்சிப்பவர்கள் வெறுமனே "சபரிமலை பக்தர்கள் போல் நடிக்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
கோழிக்கோட்டில்ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், "இந்த நபர்களுக்கு உண்மையில் மனதளவில் தூய்மையும், கொள்கைகளும், பக்தியும் இருந்தால், அவர்கள் வெளிப்படையாக அதை சொல்ல வேண்டும். அரசியல் வசதிக்காக மட்டுமே ஐயப்பனுக்கு விழா எடுக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.
 
பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களின் பாதங்களை கழுவி மரியாதை செலுத்தும் சடங்கான 'குரு பூஜை'க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, சில ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தன்னை அணுகியதாக ஆளுநர் அப்போது சுட்டிக்காட்டினார்.
 
தனது எண்ணங்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸால் ஈர்க்கப்பட்டவை என்றும் ஆளுநர் ஆர்லேகர் வெளிப்படையாக தெரிவித்தார். தேசத்தை கட்டமைப்பது மற்றும் சமூகத்தை ஒருங்கிணைப்பதில் ஆர்.எஸ்.எஸ். கவனம் செலுத்துவதை பற்றி அவர் பேசினார். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூம்புகாரில் கடலுக்கு அடியில் கட்டிடங்கள்.. ஒரு வணிக நகரமே இருப்பது கண்டுபிடிப்பு..!

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் யுபிஎஸ்சி ஆலோசனை.. இன்று இறுதி செய்ய வாய்ப்பு..!

பெண்ணை தூக்கி தீ மிதிக்க சென்ற முதியவர்.. இருவரும் விழுந்து படுகாயம்.. அதிர்ச்சி தகவல்..!

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை கூடாது.. மீறினால் நடவடிக்கை: எச்சரிக்கை சுற்றறிக்கை

எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் தெரியவில்லை, நாங்கள் சொல்லி கொடுக்க தயார்: செல்வப்பெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments