Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள திரையுலகை உலுக்கும் பாலியல் புகார்.! யார் அந்த நடிகர்கள்.? முதல்வருக்கு முக்கிய கோரிக்கை.!!

Senthil Velan
புதன், 28 ஆகஸ்ட் 2024 (17:34 IST)
பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்களின் பெயர்களை வெளியிடக் கோரி கேரள திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.  
 
மலையாளத் திரையுலகில் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடந்ததாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   தற்போது நடிகைகள் பலர் தங்களுக்கும் பாலியல் தொல்லை நடந்ததாக புகார் தெரிவித்து வருகின்றனர். பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா மலையாள இயக்குநர் ரஞ்சித் மீதும், மலையாள நடிகை ரேவதி சம்பத், நடிகர் சித்திக் மற்றும் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். 
 
இதையடுத்து நடிகை மினுமுனீர்  நடிகர் மற்றும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முகேஷ் மற்றும் மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.  இதில் ரஞ்சித் மற்றும் நடிகர் சித்திக் இருவரும் இந்த புகார்களைத் தொடர்ந்து அவர்கள் வகித்து வந்த சங்கப் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் இரண்டு பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
பாலியல் புகாரை தொடர்ந்து கேரள அரசின் குழுவில் இருந்து எம்.எல்.ஏ. முகேஷ் நீக்கப்பட்டார்.  மேலும் பாலியல்  புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் ஒரே நாளில் 14 புகார்கள் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


ALSO READ: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு.! ஜனாதிபதி திரவுபதி முர்மு..!!
 
 
இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்களின் பெயர்களை வெளியிடக் கோரி கேரள திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பக்தர்கள் கொடுத்த 227 கிலோ தங்கம்.. மத்திய அரசிடம் முதலீடு செய்யும் சபரிமலை தேவஸ்தானம்..!

காலிஸ்தான் ஆதரவாளர்களை நாட்டை விட்டு வெளியேற நியூசிலாந்து எச்சரிக்கை.. பரபரப்பு தகவல்..!

அதானி நிறுவனத்துடன் ரூ.5900 கோடி ஒப்பந்தம்.. அதிரடியாக ரத்து செய்த கென்யா அதிபர்..!

ரஜினியை திடீரென சந்தித்த சீமான்.. விஜய்க்கு செக் வைக்கப்பட்டதா?

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

அடுத்த கட்டுரையில்