கொரோனா எதிரொலி: அதிரடி முடிவெடுத்த கேரள அரசு!!

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (10:53 IST)
Corona Virus

கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் பரவி வருவதை அடுத்து இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வரும் நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மூவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் கேரளாவில் அவசரநிலையை அறிவிப்பதாக தெரிவித்தார். இது ஏற்படுத்திய பெரும் பரபரப்பு அடங்குவதற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அவசரநிலையாக பிரகடனம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.. தேர்தல் ஆணையர்..!

பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு.. எத்தனை கட்டம்? தேர்தல் முடிவு தேதி உள்பட முழு விவரங்கள்..!

தவெக மீது சில தவறுகள் இருந்தாலும் விஜய்யை குற்றவாளியாக்க கூடாது: அண்ணாமலை பேட்டி..!

ரூ.249 ரீசார்ஜ் ப்ளானை நீக்கிய வோடபோன் ஐடியா.. அதுக்கு பதிலா? - பயனர்கள் அதிருப்தி!

காலாண்டு முடிந்து வந்த மத்திய கல்வி நிதி! மாணவர் சேர்க்கை அறிவித்த தமிழக அரசு!

அடுத்த கட்டுரையில்
Show comments