Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள முதல்வர் மகள் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு.. பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்..!

Mahendran
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (12:41 IST)
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது லஞ்சக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், நிலைமை பரபரப்பாக மாறியுள்ளது.
 
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் தனியார் சுரங்க நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
 
மேலும், இது குறித்து விசாரணை நடத்தி, வீணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொச்சி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
 
இந்த சூழ்நிலையில், மகள்மீது லஞ்சக் குற்றச்சாட்டு இருப்பதால், முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக வலியுறுத்தி வருகின்றன.
 
இது தொடர்பாக, பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியபோது, "பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, பினராயி விஜயன் முதல்வர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே விசாரணை நியாயமாக நடக்கும். அவர் பதவி விலக வேண்டும்" என்று கூறினார். மேலும், இதற்காக பாஜக போராட்டங்களை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் வசதி.. புறப்படும் நேரம் என்ன?

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.. இனியும் தாமதம் கூடாது: அன்புமணி

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments