Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவாலயத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

தேவாலயத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (11:39 IST)
கேரளா மாநிலம் கோட்டபுரம் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட தேவாலயம் ஒன்றில் 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாதிரியார் ஒருவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பலாத்காரம் செய்து வந்தார். அவருக்கு தற்போது இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
 
கடந்த 2015, ஏப்ரல் மாதம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பாதிரியார் ஃபிகரேஸ் மீது பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்தனர். அதில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை ஜனவரி மாதம் முதல் பாதிரியார் ஃபிகரேஸ் பல முறை பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதில் மூன்று முறை தேவாலயத்தில் வைத்தே சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
 
சிறுமியின் பெற்றோர் கொடுத்த இந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து கேரளா உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
 
நீதிமன்றம் மே மாதம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் நாடு திரும்பினார். பாதிரியார் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை கோட்டபுரம் கத்தோலிக்க மறைமாவட்டம் மறுத்தது. ஆனால் போலீசார் பாதிரியார் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்தியதை அடுத்து அவரை தற்காலிகமாக கத்தோலிக்க திருச்சபையில் இருந்து நீக்கியது.
 
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரை விசாரித்த நீதிமன்றம் பாதிரியாரை குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்