நேற்றை விட இன்று 12 ஆயிரம் பேர்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு: என்ன நடக்குது கேரளாவில்?

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (18:15 IST)
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலமாக இருக்கும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக நேற்று கேரளாவில் 17,821 பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது
 
இந்த நிலையில் கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக மேலும் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று திடீரென சுமார் 30 ஆயிரம் பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இன்று ஒரே நாளில் கேரளாவில் 29,803 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 177 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இன்று ஒரே நாளில் கேரளாவில் 1,43,028 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இன்று ஒரே நாளில் 33,397 கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கேரளாவில் திடீரென நேற்றைவிட இன்று சுமார் 12 ஆயிரம் பேர்களுக்கும் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று பெரும் ஆச்சரியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments