Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூட்யூபில் பெண்கள் பற்றி ஆபாச பேச்சு! யூட்யூபருக்கு கரி ஆயில் அபிஷேகம்!

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (09:55 IST)
கேரளாவில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும், அபதூறாகவும் பேசி வந்த பிரபல யூட்யூபருக்கு பெண்கள் கரி ஆயிலை பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் விஜய் நாயர். யூட்யூப் சேனல் நடத்தி வரும் இவர் சபரிமலை விவகாரத்தில் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி தனது சேனலில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதுகுறித்து பெண்ணிய செயல்பாட்டாளர்கள் சிலர் சைபர்க்ரைம் போலீஸாரிடம் புகாரும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் நாயர் சபரிமலை செல்ல முயன்ற டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி என்பவர் குறித்து ஆபாசமாக திட்டி பதிவிட்டுள்ளார். இதனால் பாக்கியலட்சுமி தலைமையில் விஜய் நாயர் வீட்டிற்கு சென்ற பெண்கள் சிலர் விஜய் நாயர் அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார். இதனால் பெண்கள் தாங்கள் கொண்டு வந்த கரி ஆயிலை அவர் மீது ஊற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பிறகு அவர் தான் இனி ஆபாசமாக பேசமாட்டேன் என மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. அவதூறாக பேசிய யூட்யூபரை வீட்டிற்கே சென்று பெண்கள் குழு கரி ஆயில் அபிசேகம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி மகனுடன் மோதல்.. பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது..!

சத்துணவு முட்டையை பதுக்கிய ஊழியர்கள்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு அடி உதை! திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

இன்று மாலை மற்றும் இரவில் 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

மக்களை ஏமாற்றவே நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

6 GB RAM, 128 GB Memory.. வெறும் ரூ.7500க்கு..! POCO C71 சிறப்பம்சங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments