Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : அர்விந்த் கெஜ்ரிவால்

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : அர்விந்த் கெஜ்ரிவால்
, செவ்வாய், 19 ஜனவரி 2016 (13:41 IST)
ஐதராபாத் மத்திய் பல்கலைக்கழக தலித் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து கூறியுள்ளார்.


 

 
ஹைதராபத் கேந்திராய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படித்து வந்த ரோகித் வேமுலா என்ற மானவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். சாதியின் பெயரில் ஒழுங்கீனமாக நடப்பதாக கூறி ரோகித் வேமுலா உட்பட ஐந்து மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சமீபத்த்தில் இடை நீக்கம் செய்திருந்தது. 
.
அவர்கள் வகுப்புகள் மற்றும் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இந்த இடைநீக்க  நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்நிலையில் ரோகித் , தனது நண்பர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார்.
 
அவர், தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதியிருந்த கடிதத்தில், பல்கலைக்கழகம் ஒருவரின் திறமையை மதிப்பதில்லை என்றும், சாதி அடிப்படையில் பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரின் மரணம் பெரிய போராட்டமாக வெடித்துள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் “அரசியலமைப்பு சட்டத்தின்படி தலித் மக்களை உயர்த்த மோடியின் அரசு கடமைப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு நேர்மாறாக அவரது அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் ஐந்து தலித் மாணவர்களை சஸ்பெண்ட் செய்து, தனிமைப்படுத்த வைத்துள்ளனர். 
 
இது தற்கொலையல்ல,  ஜனநாயக படுகொலை, சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் மீதான படுகொலை. இதற்கு காரணமான மந்திரிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும். மேலும், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil