Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமரையில் ஐக்கியமாகும் கீர்த்தி சுரேஷின் தந்தை.. வளைத்து வளைத்து ஆள்பிடிக்கும் பாஜக..!

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (06:28 IST)
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் உட்பட பலரையும் அரசியல் கட்சிகள் வளைத்து போட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பாக பாஜக வளைத்து வளைத்து ஆள்களை கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரம் தொகுதியில் பிரபல நடிகை ஷோபனா பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் என்பவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் அவர்தான் திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் என்றும் கூறப்படுகிறது.

மலையாளத் திரையுலகில் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் ஏற்கனவே பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர் என்பதும் அவ்வப்போது பாஜகவின் பெருமைகள் மற்றும் மோடியின் பெருமைகளை பேசி வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஷோபனா அல்லது சுரேஷ் ஆகிய இருவரில் ஒருவர் தான் திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரை எதிர்த்து போட்டியிட போவதாகவும் பாஜகவில் இணையவும் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடவும் கீர்த்தி சுரேஷ் தந்தை சுரேஷ் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

பாஜக வளைத்து வளைத்து தனது கட்சியில் ஆட்களை சேர்ப்பதை பார்த்தால் திரையுலகில் ஒருவரையும் விட மாட்டார்கள் போல் தெரிகிறது என சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments