Webdunia - Bharat's app for daily news and videos

Install App

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

Mahendran
புதன், 5 மார்ச் 2025 (19:20 IST)
கேதார்நாத் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், ரூ. 4,000 கோடி செலவில் ரோப் கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 
கேதார்நாத் யாத்திரைக்கு இதுவரை பக்தர்கள் 9 மணி நேரம் பயணம் செய்த நிலையில், இந்த புதிய திட்டத்தால் வெறும் 36 நிமிடங்களில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து கூறிய போது, "பர்வத்மாலா பரியோஜனா" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த ரோப் கார் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
 
இதற்கான மொத்த செலவு ₹6,800 கோடிக்கு மேல் இருக்கும். முதற்கட்டமாக, ₹4,000 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.
 
தற்போது, இந்த தொலைவை கடக்க பக்தர்களுக்கு 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. ஆனால், ரோப் கார் அமைக்கப்பட்டால் வெறும் 36 நிமிடங்களில் பயணம் முடிக்கலாம்.
 
இந்த திட்டம் ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் நிபுணர்களின் உதவியுடன் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 வயது சிறுமியிடம் 50 லட்ச ரூபாய் மோசடி.. மார்பிங் செய்து மிரட்டிய நண்பனின் சகோதரர்..

எந்த போராக இருந்தாலும் அமெரிக்காவுடன் மோத தயார்: சீனா அதிரடி அறிவிப்பு..!

பஞ்சாப் மாநிலத்தில் தியானம் செய்ய வந்த கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..!

கோவில் நிகழ்ச்சிகளில் சினிமா பாட்டுக்கு தடை! - நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments