மகள் கவிதாவை கட்சியில் இருந்து சீக்கினார் சந்திரசேகர் ராவ்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (14:55 IST)
பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் மற்றும் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், தனது மகளும், எம்.எல்.சி.யுமான கே. கவிதாவை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். 
 
கட்சியின் மூத்த தலைவர்களான டி. ஹரீஷ் ராவ் மற்றும் முன்னாள் எம்.பி. மேகா கிருஷ்ணா ரெட்டி ஆகியோர், தனது தந்தை கே.சி.ஆர். மீது "ஊழல் முத்திரை" குத்துவதாகவும், அவரை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் கவிதா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
 
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, கவிதா வெளிநாட்டில் இருந்தபோது, தெலங்கானா போகு கனி கார்மிகா சங்கம் என்ற தொழிலாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் பதவியிலிருந்து அவர் திடீரென நீக்கப்பட்டார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தன்னை கட்சியிலிருந்து ஓரங்கட்ட சதி நடப்பதாகவும் கவிதா குற்றம் சாட்டினார்.
 
இந்த நிலையில் அவர் சொன்னது போலவே தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான இந்த அரசியல் மோதல், தெலங்கானா அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments