Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலாளி உயிருடன் புதைக்கப்பட்ட விபரீதம்

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2015 (12:21 IST)
மத்தியப்பிரதேசத்தில் தொழிலாளி ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
மத்தியப்பிரதேச மாநிலம் கான்டி பகுதியி்ல் சாலையோரம் இருந்த பள்ளத்தை நிரப்பும் பணியில் ஜே.சி.பி.இயந்திரம் ஒன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ஜே.சி.பி.இயந்திரத்தின் ஓட்டுநருக்கு உதவியாக, கூலித் தொழிலாளி ஒருவர் பள்ளத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
 
அப்போது எதிர்பாரதவிதமாக அந்தக் கூலித் தொழிலாளி பள்ளத்தினுள் விழுந்துள்ளார். இதனைக் கவனிக்காத ஜே.சி.பி. ஓட்டுநர் தொடர்ந்து மண்ணை அள்ளி பள்ளத்தை நிரப்பியுள்ளார்.
 
இந்தநிலையில் கூலித்தொழிலாளி திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த அந்த ஓட்டுநர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மூடிய பள்ளத்தை மீண்டும் தோண்டினர்.

அப்போது மண்ணில் புதைந்த நிலையில் கூலித் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. உயிரிழந்த அந்த தொழிலாளியின் பெயர் லத்தோரி லால் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!

Show comments