Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்வா சிறுமி கற்பழித்து கொலை; 3 பேருக்கு ஆயுள்: நீதிமன்றம் அதிரடி!!

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (17:07 IST)
கத்வா சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட் 6 பேரில் மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
கத்வா பகுதியில் 8 வயதான சிறுமியை கதுவா காட்டுப் பகுதியில் இருந்து கடத்திச் சென்ற கொடூரர்கள், கோவில் ஒன்றில் 4 நாட்களாக மறைத்து வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை பஞ்சாப் பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சஞ்சி ராம், ஆனந்த் தத்தா, பர்வேஷ்குமார், தீபக் கஜூரியா, சுரேந்தர் வர்மா, திலக் ராஜ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.  
இதனை தொடர்ந்து இப்போது தண்டனை விவரம் வெளியாகியுள்ளது, அதன்படி கத்வாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேரில் சஞ்சிராம், தீபக் கஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், மீதமுள்ள மூவரான திலக் ராஜ், உதவி காவல் ஆய்வாளர் ஆனந்த் தத்தா, சுரேந்தர் வர்மா ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மைனர் சிறுவன் விஷால் என்பவன் விடுதலை செய்யப்பட்டுள்ளான். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments