Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானிற்கு எதிராக கோஷமிடும்படி வற்புறுத்தி காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்

பாகிஸ்தானிற்கு எதிராக கோஷமிடும்படி வற்புறுத்தி காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்
, திங்கள், 5 மே 2014 (15:42 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வசித்து வந்த காஷ்மீர் மாணாவர்கள் பிற மாணவர்களால் தாக்கப்பட்டதை அடுத்து சுமார் 100 காஷ்மீர் மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 
நொய்டாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நொய்டா சர்வதேச பல்கலைக்கழகத்தில் படித்து வரும் காஷ்மீர்  மாணவர்கள் வசித்துவந்தனர். இவர்களில் முன்றுபேரை அதே விடுதியை சேர்ந்த பிற மாணவர்கள் பாகிஸ்தானிற்கு எதிராக கோஷமிடும்படி வற்புறுத்தியுள்ளனர்.
 
காஷ்மீர் மாணவர்கள் அவ்வாறு செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த பிற மாணவர்கள் அவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
கடந்த மார்ச் மாதத்தில், மீரட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள்  கிரிக்கெட் போட்டியின் போது இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வென்ற பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியதற்காக பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டனர் இதற்கு காஷ்மீர் முதலமைச்சர்  உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் தற்போது மீண்டும் நொய்டாவில் நடந்துள்ள இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காஷ்மீர் முதலமைச்சர்  உமர் அப்துல்லா டிவிட்டர் வலைதளத்தில், 'பல்கலைக்கழக மற்றும் மாநில அதிகாரிகளால்  காஷ்மீர் மாணவர்களை பாதுகாக்க முடியாது என்றால் உங்கள் இயலாமை மற்றும் விருப்பமின்மையை ஒப்புக்கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil