Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா ஸ்டோரியால் மாணவர்களிடையே மோதல்! – காஷ்மீரில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (14:58 IST)
சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி படத்தால் காஷ்மீரில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமிய மக்களை தவறாக சித்தரிப்பதாக பல அமைப்புகள் அந்த படத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தின. ஆனாலும் படம் பல மாநிலங்களில் வெளியானது. சில மாநிலங்களில் மட்டும் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீரில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் ஒருவர் கேரளா ஸ்டோரி படத்தின் லிங்கை மாணவர்கள் வாட்ஸப் க்ரூப் ஒன்றில் ஷேர் செய்துள்ளார். இதற்கு சக மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் இடையே திடீர் மோதல் எழுந்துள்ளது.

அந்த சமயத்தில் வெளி நபர்கள் சிலர் விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து போலீஸார் வந்த நிலையில் போலீஸாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். மாணவர்கள் இடையேயான மோதலால் கல்லூரி பரபரப்புக்கு உள்ளானது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சில மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments