Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் கனமழை: ஸ்ரீநகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia
திங்கள், 30 மார்ச் 2015 (10:39 IST)
காஷ்மீரில் கனமழை பெய்துவருவதால் ஸ்ரீநகக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


 



காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மத்திய காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டத்தில் சான்டினார் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
 
அதில் 8 வீடுகள் மற்றும் 10 மாட்டு கொட்டகைகள் முற்றிலும் இடிந்து நாசமாயின. அமலும் இங்கு 36 வீடுகள் இலேசான சேதம் அடைந்தன.
 
தொடர்ந்து மழை பெய்து வருவதால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் என்று பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
கனமழை காரணமாக, ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நெஞ்சாலை மூடப்பட்டது. அங்கு சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில்,  சீலம் நதி அபாய கட்டத்தை எட்டியுள்ளதால் ஸ்ரீநகக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
காஷ்மீரில் மேலும் 6 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments