Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் தாக்குதல்....இந்தியாவுக்கு உதவ தயார் - அமெரிக்கா அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (13:14 IST)
நேற்று காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இதில் முக்கியமாக இந்த தீவிரமான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் மத்திய அரசுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சமீப காலமாக காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் மோசமான தாக்குதலை நேற்று தீவிரவாதிகள் நடத்தினர். இதை நம் ராணுவ வீரர்கள் சாவாலாகவே எதிர்கொண்டனர்.
 
புல்வாமா மாவட்டத்தில் காரில் 350 கிலோ வெடி குண்டு நிரப்பிக் கொண்டு ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாகுதலில் மத்திய ரிசர்வ் படை போலீஸார் 40 பேர் உயிரிழந்தனர்.
 
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலக தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது :
 
அதில், இந்த தாக்குதலை நடத்தியுள்ளது ஜெய்ஷ் இ முகம்மது அமைப்புதான். ஏற்கனவே இவ்வமைப்பு ஐநா சபையால் தீவிரவாத இயக்கம் என்று அறிவுக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு ஆதரவாக மற்ற நாடுகள் புகலிடம் தருவதை நிறுத்த வேண்டும். இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது . இவ்வாறு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

பிரதமர் மோடியின் கனவு: இந்திய இளைஞர்கள் சொந்த சமூக ஊடகங்களை உருவாக்க வேண்டும்!

ஒரே வாரத்தில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

முதலமைச்சர் முக ஸ்டாலினின் சுதந்திர தின உரையில் உள்ள முக்கிய அம்சங்கள்..

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்! பக்தர்கள் உற்சாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments