Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயை பற்றி தவறாக பேசிய மக்கள்; ஆத்திரத்தில் மகன் செய்த செயல்! – கர்நாடகாவில் கொடூரம்!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (08:25 IST)
கர்நாடகாவில் தாயின் நடத்தையால் கோபமுற்று மகனே தாயை வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் வனஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் பாரவ்வா. இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்துவிட்ட நிலையில் தனது மகன் சிவப்பாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். பாரவ்வா அதே கிராமத்தை சேர்ந்த வேறு ஒருவருடன் உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஊர் மக்கள் பலர் சிவப்பாவிடம் பல்வேறு விதமாக கூற, தன் தாயுடன் அடிக்கடி இதுகுறித்து அவர் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்னதாக வயல்வேலை முடித்து விட்டு வந்த தன் தாய்க்கு மதுவை குடிக்க கொடுத்துள்ளார் சிவப்பா. பிறகு அவரை வயலுக்கு அழைத்து சென்று அங்கு வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். வயலில் பாரவ்வா இறந்து கிடப்பது தெரிந்து ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் பாரவ்வாவின் சகோதரி ஒருவர் சிவப்பா மீது சந்தேகம் இருப்பதாக கூறியதால் சிவப்பாவை போலீஸார் அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில் தான் தனது தாயை வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சிவப்பா ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments