Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடி நிறுவனங்களில் 14 மணி நேர வேலை கட்டாயம்? அலறும் ஊழியர்கள்..!

Siva
ஞாயிறு, 21 ஜூலை 2024 (11:10 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இனிமேல் 14 மணி நேரம் தினமும் வேலை செய்ய வேண்டும் என்ற பரிந்துரை செய்திருப்பதாகவும் இந்த பரிந்துரை கர்நாடக மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் தகவல் ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து இங்குள்ள ஐடி நிறுவனங்களில் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஐடி நிறுவனங்கள் பணியாளர்களின் தினசரி வேலை நேரத்தை 14 மணி நேரமாக மாற்றம் செய்ய வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் உள்ள சட்டத்தை திருத்த வேண்டும் என்றும் 14 மணி நேரம் வேலை என்ற நிலையை அமல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு இனி 14 மணிநேர வேலை இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு கடும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு தான் 100% பணியை வழங்க வேண்டும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டு அதன் பின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது 14 மணி நேர பரிந்துரையை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments