Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை தொடர்ந்து Cinema OTT தொடங்கும் கர்நாடக அரசு! - சித்தராமையா அறிவிப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 7 மார்ச் 2025 (15:08 IST)

கர்நாடக மாநில ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் அரசே ஓடிடி தொடங்குவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் சித்தராமையா.

 

சினிமா என்பது தியேட்டர்கள், தொலைக்காட்சி சேனல்களை தாண்டி தற்போது ஓடிடி எனப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செயலிகள் வழியாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் ஏராளமான ஓடிடி தளங்கள் பல்வேறு திரைப்படம், வெப் சிரிஸ், சீரியல்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கை வழங்கி வருகின்றன.

 

இந்நிலையில் கேரள அரசு மலையாள திரைப்படங்களுக்காக தானே புதிதாக CSPACE என்ற பெயரில் புதிய ஓடிடியை தொடங்கியது. இந்நிலையில் பல மொழி சினிமாத்துறையினரும் அதுபோன்று அரசே ஓடிடி தளங்களை உருவாக்கி அந்தந்த மொழி சினிமா முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என கோரிக்கைகள் வைத்து வருகின்றன.

 

இந்நிலையில் கன்னட படங்களுக்காக புதிய ஓடிடி தளத்தை அரசே உருவாக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மாநில பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதனால் கன்னடத்தில் வெளியாகக் கூடிய சிறிய படங்களுக்கு கூட மக்களிடையே அரசு ஓடிடி உதவியால் கவனம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments