Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் எங்கள் சகோதர மாநிலம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (16:03 IST)
தமிழகம் எங்கள் சகோதர மாநிலம் என்றும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வோம் என்றும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 
 
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே மேகதூது அணை விவகாரம் மற்றும் காவிரியில் நீர் திறந்து விடுவது குறித்த விவகாரம் உச்ச கட்டத்தில் உள்ளது. 
 
காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என தமிழக அரசு காவிரி மேலாண்மைக்கு கடிதம் எழுதி உள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டது. அதேபோல் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா கூறி இருக்கும் நிலையில் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என தமிழகம் கூறிவருகிறது. 
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தமிழகம் எங்கள் சகோதர மாநிலம் என்றும் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது என்றும் தெரிவித்தார். மேலும் இரு மாநிலப் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments