Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி..!

Webdunia
சனி, 25 மார்ச் 2023 (11:30 IST)
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிர முயற்சியில் உள்ளன 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் கூட்டணி இன்றி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி காங்கிரஸ் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் சித்தாராமையா வருணா என்ற தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கனகபுரா என்ற தொகுதியில் போட்டியிட உள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முக்கிய மாற்றம்: பயணிகளுக்கான புதிய வசதி

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments