Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலில் முதல்வரின் முதல் மனைவி போட்டியா?

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (08:58 IST)
சமீபத்தில் ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுடன் கர்நாடக மாநிலத்தில் காலியாகவுள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியான ராமநகரா என்ற தொகுதியில் தான் போட்டியிட போவதாக முதல்வர் குமாரசாமியின் முதல் மனைவியும் முன்னாள் நடிகையுமான அனிதா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனிதா, தன்னை ராமநகரா தொகுதியின் வேட்பாளராக நிறுத்த கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைமையோ, முதல்வர் குமாரசாமியோ இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் அனிதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

திருமண மண்டபத்தில் திடீரென புகுந்த சிறுத்தை.. காருக்குள் ஒளிந்து கொண்ட மணமக்கள்..!

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டம் இல்லை: முடிவை கைவிட்ட அதானி..!

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments