Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்: முதல்வர் சித்தராமைய்யா

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (11:12 IST)
கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் ஹிஜாப்பிற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம் என அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
 
கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் எந்த தீர்ப்பை பின்பற்றுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் கடந்த ஆட்சியில் கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக ஐகோர்ட்டு விதித்த தடை தொடரும் என்று தெரிவித்துள் இருந்தார்.
 
 இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாறியுள்ள நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
 
எந்த உடை அணிவது, என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் அதை நான் ஏன் தடுக்க வேண்டும் என்றும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள் என்று முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments