அன்று ஆபாச பட சர்ச்சை எம்.எல்.ஏ: இன்று துணை முதல்வர் – லக்‌ஷ்மண் சங்கப்பா

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (15:20 IST)
கர்நாடக சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ கர்நாடகத்தின் துணை முதல்வர் ஆகியுள்ளார்.

கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியமைத்ததை தொடர்ந்து அவரது தலைமையிலான புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக்கு மூன்று துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் லக்‌ஷ்மண் சங்கப்பா சவதி.

லக்‌ஷ்மண் சங்கப்பா கர்நாடக சட்டப்பேரவையில் அமர்ந்து ஆபாசப்படம் பார்த்ததாக சர்ச்சைக்கு உள்ளானவர். அந்த சர்ச்சையை தொடர்ந்து அவர் தனது பதவியை கூட ராஜினாமா செய்தார். இந்நிலையில் இவரை துணை முதல்வராக நியமித்திருப்பது கர்நாடக பாஜக கட்சிக்குள்ளேயே பலமான எதிர்ப்புகளை கிளப்பியிருக்கிறது.

கர்நாடக பாஜகவில் லக்‌ஷ்மணுக்கு முன்னாலிருந்தே பதவி வகித்து வரும் தலைவர்கள் “இவ்வளவு மூத்த தலைவர்கள் இருக்க லக்‌ஷ்மனுக்கு அந்த பதவியை தூக்கி கொடுக்க காரணம் என்ன” என புகைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு மேலிடம் எந்த கருத்தும் கூறாமல் இருக்கிறதாம்.

மேலும் ஒரு பக்கம் முந்தைய குமாரசாமி ஆட்சி கலைக்கப்பட்டதற்கு மறைமுகமாக ல்க்‌ஷ்மண் செயல்பட்டதாகவும், அதற்காகவே துணை முதல்வர் பதவியை அலேக்காக தூக்கி அவர் கையில் கொடுத்து விட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோலக்ஸை சுற்றி வளைத்த 4 கும்கி யானைகள்! கோவையில் பிடிப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை!

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments