Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னட எழுத்தாளர் எம்.எம். எம்.எம்.கல்பர்கி சுட்டுக் கொலை: கருணாநிதி கண்டனம்

கன்னட எழுத்தாளர் எம்.எம். எம்.எம்.கல்பர்கி சுட்டுக் கொலை: கருணாநிதி கண்டனம்
, திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (22:50 IST)
பிரபல கன்னட எழுத்தாளர் எம்.எம். எம்.எம்.கல்பர்கி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாவது:-
 
சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், மிகச் சிறந்த கன்னடஎழுத்தாளருமான எம்.எம்.கல்பர்கி மர்ம நபர்களால் நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
 
மூட நம்பிக்கைகளை எதிர்த்து தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து வந்தவர் எம்.எம்.கல்பர்கி கொல்லப்பட்டதற்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
எம்.எம்.கல்பர்கியைச் சுட்டுக் கொன்றவர்கள் மீது கர்நாடக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil