Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டம்னு சொல்லி பாலியல் துன்புறுத்தல், கொலை செஞ்சாங்க! - கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை!

Prasanth Karthick
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (14:45 IST)

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியில் பிரபல நடிகையாக இருந்து வரும் கங்கனா ரனாவத் சமீபத்தில் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனார். தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக பேசி வரும் கங்கனா, முன்னதாக டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து பேசியிருந்த நிலையில், விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்த பெண் ஒருவர் கங்கனாவை அதற்காக அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்நிலையில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து கங்கனா ரனாவத் பேசியுள்ளார். “விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாம் மாநிலத்தை வங்கதேசம் போல் மாற்றி இருப்பார்கள்.

 

விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் இந்த தேசம் அறியாதது. போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல், கொலை சம்பவங்கள் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிடப்பட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றிருக்காவிட்டால் அவர்கள் நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்கள்” என்று பேசியுள்ளார். இது மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்