Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கபடி விளையாடும் போது சுருண்டு விழுந்த வாலிபர் மரணம்

கபடி விளையாடும் போது சுருண்டு விழுந்த வாலிபர் மரணம்
, புதன், 10 ஆகஸ்ட் 2016 (15:42 IST)
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கபடி விளையாடிக் கொண்டிருக்கும் போது 18 வயது வாலிபர் ஒருவர் சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பாட்டியாலாவில் அரசு பள்ளி ஒன்றில் கபடி போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற சுக்ஜிந்தர் சிங் திடீரென மைதானதில் சுருண்டு விழுந்தார் இறந்தார். இவருக்கு ஏற்கனவே வலிப்பு வியாதி இந்ததாகவும், அதற்கு தீவிர சிகிச்சை எடுத்து வந்த அவர், சமீப காலமாக சிகிச்சையை நிறுத்திவிட்டதாக அவரது தந்தை கூறியுள்ளார்.
 
கபடி மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்த 18 வயதான சுக்ஜிந்தர் சிங் மாநில அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா கோட்டை விட்ட குற்றாலீஸ்வரன்கள் : சமுகவலைத்தளங்களில் ஆதங்கம்