பிரதமர் மோடிக்கு திடீரென போன் போட்ட ஜோ பைடன், டிரம்ப், புதின் மற்றும் ரிஷி சுனக்.. என்ன காரணம்?

Siva
வியாழன், 6 ஜூன் 2024 (08:29 IST)
பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அடுத்தடுத்து போன் போட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் பிரதமராக நாளை மறுநாள் மோடி மீண்டும் பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கு மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக எனது வாழ்த்துக்கள்.. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் வாக்களித்த 65 கோடி வாக்காளர்களுக்கும் வாழ்த்துகள். நமது நாடுகளிடையேயான நட்பு தொடர்ந்து வளர வேண்டும்"

அதேபோல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியவர்களும் பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகின் முக்கிய நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்களுக்கு பிரதமர் மோடி நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments