Webdunia - Bharat's app for daily news and videos

Install App

AI தொழில்நுட்பம் படித்தால் உடனே வேலை.. இந்தியாவில் மட்டும் 45000 பேர் தேவை என தகவல்..!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (14:25 IST)
AI தொழில்நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்த படிப்பு படித்தவர்களுக்கு உடனே வேலை கிடைக்கும் என்றும் இந்தியாவில் மட்டும் சுமார் 45 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
AI  என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்றும், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் நுழைந்து விட்டதால் பலருக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. 
 
பத்து மனிதர்கள் செய்யும் வேலையை இந்த AI தொழில்நுட்பம் ஒரு சில நிமிடங்களில் செய்து விடுகிறது என்பதால் பலருக்கு வேலை இழந்தாலும் இந்த தொழில்நுட்பத்தை படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆண்டு 10 முதல் 15 லட்சம் ரூபாய் சம்பளத்தில் AI வல்லுநர்கள் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள் என்றும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு 45 முதல் 50 லட்ச ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய தொழில்நுட்பமான AI தொழில்நுட்பம் குறித்த படிப்பை படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் நான் மிகவும் புரட்சிகரமாக பார்த்த தொழில்நுட்பம் என்றால் அது செயற்கை நுண்ணறிவு தான் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பரிட்சையில் தோல்வி அடைய சாமி தான் காரணம்.. கடவுள் சிலையை உடைத்த சிறுவன் கைது..!

நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி மனு.. விரைவில் விசாரணை என தகவல்..!

அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறு: தவெக புஸ்ஸி ஆனந்த்

ஜியோ ஹாட்ஸ்டார் இல்ல.. இனிமேல் JioStar தான்..! ஜியோ டிஸ்னி இணைப்பின் புதிய தளம்!

முஸ்லிம் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை: பாஜக பேச்சால் சர்ச்சை

அடுத்த கட்டுரையில்
Show comments