ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு: விண்ணப்பங்களை திருத்தம் செய்வது எப்போது?

Mahendran
புதன், 26 பிப்ரவரி 2025 (16:18 IST)
ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பிப்ரவரி 27, 28-ம் தேதிகளில் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை  அறிவித்துள்ளது.
 
ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு ஏப்ரல் 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் விண்ணப்ப திருத்தத்துக்கு jeemain.nta.nic.in இணையதளத்தை பயன்படுத்தலாம் என தேசிய தேர்வுகள் முகமை  அறிவித்துள்ளது.
 
மேலும் கூடுதல் தகவல்களுக்கு nta.ac.in அல்லது 011-40759000/69227700 என்ற தொலைபேசிகள் மற்றும் jeemain@nta.ac.in மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளலாம்.
 
ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு விண்ணப்பத் திருத்தம் குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ:
 
விண்ணப்பத் திருத்த காலம்: பிப்ரவரி 27, 28 (jeemain.nta.nic.in)
தேர்வு தேதி: ஏப்ரல் 1 - 8
விண்ணப்ப திருத்தம்: ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே திருத்தம் செய்யலாம்
ஹால்டிக்கெட்: பின்னர் வெளியிடப்படும்
கூடுதல் தகவல்: nta.ac.in
தொடர்பு: 011-40759000 / 69227700, jeemain@nta.ac.in
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments