Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

Mahendran
சனி, 19 ஏப்ரல் 2025 (11:35 IST)
ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று  வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆர்வத்துடன் முடிவை பார்த்து வருகின்றனர்.
 
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக்., போன்ற இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) தேர்ச்சி பெறுவது அவசியமாகும். 
 
ஜேஇஇ தேர்வு, முதன்மை மற்றும் பிரதான என்ற இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதன்மைத் தேர்வு தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மூலம் ஆண்டுதோறும் இரு கட்டங்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 22 முதல் 30 வரை நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 13 லட்சம் பேர் பங்கெடுத்தனர், மேலும் அதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியானது.
 
இதன் பின்னர், ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்ரல் 1 முதல் 8-ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வு 13 மொழிகளில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட, நடத்தப்பட்டது. தேர்வுக்கான விடைக்குறிப்பு நேற்று வெளியிடப்பட்டதும், இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 
 
தேர்வர்கள் முடிவுகளை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம். இந்த தேர்வில் 2 பெண்கள் உள்பட 24 பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக, ராஜஸ்தானில் 7 பேர், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசத்தில் தலா 3 பேர், தில்லி, குஜராத், மேற்குவங்கத்தில் தலா 2 பேர், ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் தலா ஒருவர் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

போக்குவரத்தை சரிசெய்யும் ‘குட்டிப்புலி’ ரோபோ!.. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்..!

தனியார்ல ஏகப்பட்ட சலுகைகள் இருக்கு.. லிஸ்ட் போட்ட மாநகராட்சி! - கைவிடப்படுமா தூய்மை பணியாளர்கள் போராட்டம்?

வேலைக்கு செல்லாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.40,000 வழங்கும் திட்டம்: இன்று முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments