Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆண்டுகளுக்கு பின் ஜம்மு காஷ்மீரில் தேர்தல். விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

Mahendran
புதன், 18 செப்டம்பர் 2024 (11:03 IST)
ஜம்மு - காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ராணுவத்தின் பலத்த பாதுகாப்பில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் தங்கள் வாக்குகளை உற்சாகமாக பதிவு செய்கின்றனர்.

ஜம்மு - காஷ்மீரில் கடைசியாக 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தற்போது, 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த தேர்தல், 2019 இல் ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின்பு முதல் முறையாக நடைபெறுவதால் அதிக ஆவலையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி தனித்தனியாகவும், காங்கிரஸ் - தேசிய மாநாடு கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

ஜம்மு - காஷ்மீரின் மொத்தம் 90 பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25 ஆம் தேதி 26 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1 ஆம் தேதி 40 தொகுதிகளுக்கு நடத்தப்படவுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments