திகார் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் என்னை அடித்தனர்: ஜாபர் சாதிக் கூட்டாளி வழக்கு

Siva
வெள்ளி, 10 மே 2024 (11:22 IST)
திகார் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடித்ததாக கூறி, ஜாபர் சாதிக் கூட்டாளி வழக்கு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதை மருந்து கடத்தியதாக ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி சதானந்தம் மனு தாக்கல் செய்துள்ளார்

ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த நிலையில் கடந்த 8ஆம் தேதி விசாரணையின் போது அமலாக்கத்துறை அதிகாரி சுனில் சங்கர் அடித்து துன்புறுத்தியதாக மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய திகார் சிறைக்கு உத்தரவிட வேண்டும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments