Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பட்டேலை எதிர்த்து கிரிக்கெட் வீரரின் மனைவி: பாஜகவின் மெகா திட்டம்

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (10:52 IST)
குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்காக பாடுபட்டு வரும் ஹர்திக் பட்டேல், கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ், பாஜக என இரண்டு தேசிய கட்சிகளை சுயேட்சையாக தோற்கடித்தவர். ஆனால் தற்போது அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சமீபத்தில் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் குஜராத் மாநிலம் ஜாம்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் ஜாம்நகர் தொகுதியில் ஹர்திக் பட்டேலை எதிர்த்து பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ஹர்திக் பட்டேல் தனிப்பட்ட முறையில் அந்த தொகுதியில் செல்வாக்கு உடையவர். தற்போது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிடுவதால் அவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை இறக்க திட்டமிட்டே ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக களமிறக்குகிறது.
 
ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா,  கர்ணி சேனா அமைப்பின் மகளிரணித் தலைவியாக இருந்து வருவதால் ஜாம்நகர் தொகுதி முழுவதும் நல்ல செல்வாக்குடன் உள்ளார். இவரை பாஜக களமிறக்குவதால் இந்த தொகுதியில் போட்டி வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments