Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிரந்தர இழப்பை நோக்கி விக்ரம் லேண்டர்: இஸ்ரோவின் உருக்கமான டுவீட்

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (07:55 IST)
இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவுக்கு அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி பெறாத நிலையில் விக்ரம் லேண்டரை கிட்டதட்ட இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனை ஒரு தோல்வியாக கருதாமல் இஸ்ரோவுக்கு கோடிக்கணக்கான இந்திய மக்கள் ஆதரவு தெரிவித்ததற்கு இஸ்ரோ நன்றி தெரிவித்துள்ளது.
 
 
விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள 14 நாட்கள் மட்டுமே கெடு இருந்தது. ஏனெனில் 14 நாட்களுக்கு பின் நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி இருக்காது. எனவே விக்ரம் லேண்டரில் உள்ள சோலார் பாகங்கள் செயல்பட முடியாத நிலைக்கு சென்றுவிடும். இந்த நிலையில் பத்து நாட்களை கடந்தும் இதுவரை எந்த வித முன்னேற்றமும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. விக்ரம் லேண்டரை நிரந்தரமாகவே இழக்கக் கூடிய தருணம் நெருங்கிவிட்டது.
 
 
இந்த நிலையில் இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில், தங்கள் இழப்பிலும் துணை நின்ற இந்திய மக்களின் ஆதரவுக்கு நன்றி  என்றும், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு நாம் தொடர்ந்து முன்னேறுவோம் என்றும் இஸ்ரோ பதிவு செய்துள்ளது. இருப்பினும் இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள கடைசி நிமிடம் வரை இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடுவார்கள் என்பது குறிபிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

ஒரு கோடி உறுப்பினர்கள்.. இந்தியாவின் 5வது பெரிய கட்சியானது தவெக..!

6000-க்கும் அதிகமான நபர்களின் பங்கேற்புடன் நடைபெறவிருக்கும் சென்னை அரை மாரத்தான் 2024 நிகழ்வு!

திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக இருப்பார். குஷ்பு நம்பிக்கை..!

ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்த அதானி! - அமெரிக்க குற்றப்பத்திரிக்கை தகவலால் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments