Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் சீறிப்பாய்ந்தது பிஎஸ்எல்வி சி30

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2015 (10:16 IST)
7 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி30 ராக்கெட்  இன்று  காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 


 

 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி30 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள்கள் இன்று காலை 10 மணியளவில் விண்ணில்  செலுத்தப்பட்டது. விண்னில் செலுத்தப்பட்ட 22 வது நிமிடத்தில் இந்த செயற்கைக்கோள்கள் புவியின் சுற்றுவட்டப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது.
 
இந்த ராக்கெட்டில் விண்வெளி ஆய்வுக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள ’ஆஸ்ட்ரோசாட், அமெரிக்காவின் 4 நானோ செயற்கைகோள்கள், இந்தோனேசியா, கனடா ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோள் என மொத்தம் 7 செயற்கைகோள்கள்  பிஎஸ்எல்வி சி30 ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளன.
 
இந்தியா சார்பில் அண்டவெளியில் நிலைநிறுத்தப்படும் ஆஸ்ச்ரோசாட்டின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். சூரிய சூரிய குடும்பத்தை அடுத்துள்ள விண்வெளி பகுதியை அறிந்து கொள்ளவும், எக்ஸ்-ரே கதிர்களின் மூலத்தை அறிந்து கொள்ளவும் இந்த செயற்கைகோள் உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments